Editorial / 2020 மே 25 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகள், சிவனொளிபாதமலை மலையடிவாரம் ஆகிய பகுதிகளிலுள்ள மேட்டுப்பாங்கான நிலப்பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மலை பெய்து வருகின்றமையால், மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்டக் காரியாலன அதிகாரிகள், இன்று(25) தெரிவித்தனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த வாரத்துக்கு முன்னர் வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில், தாழ்நிலப் பகுதிகளில் இன்னும் நீர்த்தேங்கி இருப்பதாகவும் இதனால், மழை விட்டு விட்டு பெய்வதால், மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலமை, எலபாத்த, கிரியயெல்ல பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எனவே, களுகங்கையின் இருபக்கக் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago