Kogilavani / 2016 ஜூன் 29 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் பிரதேசத்தில் நவீன ரக மோட்டார்களை விற்பனை செய்வதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஹட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தில் நவீனரக மோட்டர் விற்பனை செய்வது தொடர்பிலும், சமூக வலைதளங்களில் வெளிவரும் விளம்பரங்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் புதிய ரக நவீன ரக மோட்டார் சைக்கிள்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறி சமூக வலைதளங்களில் விளம்பரங்களை செய்து, பணம் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அந்த விளம்பரங்களை பார்த்து அலைபேசியில் தொடர்புக் கொள்பவர்களிடமிருந்து ஈ.சி.கேஸ் ஊடாக முற்பணம் பெற்றுகொண்டு, குறித்த அலைபேசி இலக்கத்தை செயல் இழக்க செய்து விட்டு, மீண்டும் புதிய இலக்கத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹட்டன் பிரதேசத்தில் இவ்வாறான மோட்டார் விற்பனை நிலையம் இல்லையென்றும், இது போன்ற விளம்பரங்களை நம்பவே வேண்டாம் எனவும் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026