Yuganthini / 2017 மே 10 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கேதீஸ்
“எமது மக்களின் தேவைகளுக்காக, இந்தியா இன்னும் அதிகமாக பங்களிப்பு செய்வதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது அடித்தளம் இடவேண்டும். மேலும், இவரது வருகை வெறுமனே ஒரு விழாவுக்கான வருகையாக மாத்திரம் அமைந்து விட கூடாது” என்று, மலையக தொழிலாளர் முன்னணியின் சிரேஸ்ட உப-தலைவர் ஜெயபாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையின் ஏனைய சமூகங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, தற்போதைய எமது வளர்ச்சி வீதம் நிச்சயமாக ஆரோக்கியமானதாக இல்லை.
ஆகவே, எமது சமூகத்தின் சகல மட்டத்திலான வளர்ச்சிக்கும் இலங்கை அரசாங்கத்திடம் போலவே இந்தியாவின் பங்களிப்பினையும் நாம் அதிகமாக பெற்று ஒரு பாய்ச்சலான வளர்ச்சிக்கு அடித்தளம் இடவேண்டும். பல திட்டங்களை இந்தியா வகுப்பதற்கு நாமே பிரேரணைகளை முன்வைக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நலனுக்காக கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் தமது உதவி தூதரங்களை கொண்டுள்ள இந்தியா எமது சமூக இயக்கத்துக்காக இன்னும் அக்கறை கொண்டு உதவ வேண்டும்.
மேலும், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழாவோடு எமது தேவைகளான கல்வி, கலாசாரம், வீடமைப்பு தொழில்வாய்ப்பு போன்ற தேவைகளுக்கான திறப்பு விழாவாகவும் இது அமைய வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026