Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு. புஸ்பராஜ்
பாடசாலை மாணவனுக்கு அலைபேசியில் ஆபாசப் படங்கள் காண்பித்த 35 வயதுடைய நபரொருவரை, கம்பளைப் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (04) மாலை 4.30க்கு கைதுசெய்துள்ளனர்.
கம்பளை பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வியாபார நிலையமொன்றின் மேல் மாடியில் வைத்து குறித்த சந்தேகநபர், 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்குத் தனது அலைபேசியில் ஆபாசப் படங்களை காண்பித்துள்ளார்.
இதனை அவதானித்த சிலர், பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், அலைபேசியைக் கைப்பற்றியதுடன், குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் பாடசாலை மாணவன், சந்தேகநபருக்கு மருமகன் முறையெனத் தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபரை, கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
1 hours ago