Kogilavani / 2017 மே 16 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
சர்வதேச மட்டத்திலான மாணவர்களின் தரப்படுத்தல் சம்மேளனம், இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மைதானத்தில், நேற்று ஆரம்பமாகியது.
எதிர்வரும் 19ஆம் திகதிவரை தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு நடைபெறவுள்ள இச்சம்மேளனமானது, எம்பிலிபிட்டிய ராஜபக்ஷ மண்டபம் மற்றும் சப்ரகமுவ மாகாண மத்திய நூலகத்தின் கேட்போர் கூடம் என்பவற்றில் இடம்பெறவுள்ளது.
இச்சம்மேளனத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்த 800க்கும் அதிகமான மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, சப்ரகமுவ மாகாணம் கல்வியில் சாதனைப் படைத்து வருவதற்காக, மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய உள்ளிட்ட பலருக்கு, கல்வி நிறுவனத்தில் மொத்த தரம் மற்றும் சிறப்புக்கான உலக சபையின் தலைவரும் இந்தியா லக்னோ சிடி பாலர் பாடசாலையின் முகாமையாளருமான டொக்டர் ஜெகதீஸ் காந்தி, ஞாபகார்த்த சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.




20 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
1 hours ago