2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வு: நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்,எஸ்.கணேசன்

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 04 பேரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகமப் பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே, அவிசாவளையைச் சேர்ந்த இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

குறித்த இடத்தில் மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்குத் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சுற்றிவளைப்பு மேற்கொண்டதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .