2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பொகவந்தலாவை பிரிட்வெல் செல்வகந்த தோட்டத்தில், சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவரை, பொகவந்தலாவை பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

கெசல்கமுவ ஒயா ஆற்றுப்பகுதியிலுள்ள செல்லகந்தை தோட்டத்தில் சிலர், இரகசியமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே மேற்படி அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை ஹட்டன் மாவட்ட நீதீமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .