Sudharshini / 2016 ஜனவரி 26 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ .ரமேஸ், கு.புஸ்பராஜ்
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவுக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐவர், ஹட்டன் விசேட பொலிஸ்; பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பின்;னர் பொலிஸ் பிணையில் விடுவிக்;கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுப்பட்டுள்ளனர் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) சுற்றிவளைப்பை மேற்கொண்ட ஹட்டன் விஷேட பொலிஸ்; பிரிவினர், ஐவரையும் கைதுசெய்ததுடன் மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களையும்; கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி ஐந்து சந்தேகநபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago