Sudharshini / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
மின்சார வேலியில் சிக்குண்டு மின் தாக்கத்துக்கு இலக்கான யானைகள் இரண்டு இறந்த சம்பவமொன்று கிராந்துருகோட்டை, வெலிமடயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (24) இரவு இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேற்படி மின்சார வேலியானது, சட்டவிரோதமான முறையில் வீடொன்றிலிருந்து மின்சாரத்தைப் பெற்றே அமைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
வேலியமைத்தமை தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இறந்த இரு யானைகளில் ஒரு யானைக்கு தந்தம் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago