Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
ஊழியர் சேமலாப நிதியத்தை செலுத்தத் தவறிய, கந்தகெட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவரை, 2 இலட்சம் ரூபாய் பிணையில் செல்வதற்கு பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான், அனுமதித்தார்.
மேலும், ஊழியர் சேமலாப நிதியத்தை, சம்பந்தப்பட்டவர்களுக்கு செலுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
ஊழியர் சேமலாப நிதியத்தை கொடுக்கத்தவறிய குற்றச்சாட்டுக்காக, பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, நேற்று வியாழக்கிழமை (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உபுல் வீரசிங்க, வர்த்தக நிலையத்தின் ஊழியருக்கு, ஊழியர் சேமலாப நிதியத்தை செலுத்தாமையினால், இதுதொடர்பாக பதுளை உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவருக்கு எதிராக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த ஊழியருக்கு ஒரு இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் ஊழியர் சேமலாப நிதியத் தொகையாக வழங்கப்படவேண்டும் என்றும் இந்தத் தொகையை, நான்கு தடவைகள் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026