Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சமூக சேவைகள், சிறுவர் பராமரிப்பு மற்றும் கிராமிய கைத்தொழில் கிராமிய அபிவிருத்தி அமைச்சினால், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஒரு பிரதேச செயலகப்பிரிவுக்கு ஒரு பின் தங்கிய கிராமத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒரு கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்காக 50 இலட்சம் ரூபாய் நிதி மேற்படி அமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வேலைத்திட்டத்தின் மூலம், கேகாலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரநாயக்க பிரதேச செயலகப்பிரிவில் அரம கிராமம், மாவனல்லை பிரதேச செயலகப்பிரிவில் கோன்தெனிய தெதிகம கிராமம், கேகாலை பிரதேச செயலகப்பிரிவில் தலேவெல புலுகாதெனிய கிராமம் ஆகிய மூன்று பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, கடந்த 29ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டன.

19 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
55 minute ago
1 hours ago