George / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பொகவந்தலாவை இராணிகாடு தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவியும் அவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற மாமாவையும் காணவில்லை' என சிறுமியின் பெற்றோர், பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் நேற்று (01) வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மாணவி, நேற்று காலை 07.45 மணி அளவில் முச்சக்கர வண்டியில் ஏறி சென்றதை சக மாணவியொருவர் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்விக்கற்பதுடன் அவரது மாமா என்றுக் கூறப்படும் நபர் கண்டியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ள பொலிஸார், இருவரையும் தேடி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .