Princiya Dixci / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
சிவனொளி பாதமலைத் தரிசனத்துக்கு யாத்திரிகர்கள் அதிகமாக வருவதன் காரணமாக விசேட பொலிஸ் பாதுகாப்பு அமுல்படுத்தியிருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் சமன் யடவர தெரிவித்தார்.
சிவனொளி பாதமலைத் தரிசன யாத்திரைக் காலம் ஆரம்பித்து மூன்று மாத காலப்பகுதியில் யாத்திரிகர்களின் வருகை ஐந்து இலட்சத்துக்கும் அதிகமாகக் காணப்பட்டுள்ளது.
யாத்திரிகர்கள், ஹட்டன் நல்லதண்ணி ஊடாகவும் பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வருகை தருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சிவனொளி பாதமலைக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் கினிகத்தேனை தியகல சந்தியின் ஊடாகவும் வான் மற்றும் ஏனைய வாகனங்கள் ஹட்டன் வழியாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026