Sudharshini / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷவின் கைது கவலையளிக்கின்றது. ஆனால், சட்டம் சகலருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்' என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பதுளை, ஹாலிஎல, உனுகொல்லையில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் பாதையை ஞாயிற்றுக்கிழமை (31) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர் கூறியதாவது,
'முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நண்பர் என்பதால் அவர் கைதுசெய்யப்பட்டும் விளக்கமறியலில் வைக்கப்படவில்லை. அவர் கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிரேமலால் ஜயசேகர பிரதி அமைச்சராக இருந்தும், அவர் கைது செய்யப்பட்டு ஒருவருடம் சிறையில் இருந்தார். குமார் குணரட்ணம் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், விமல் வீரவன்சவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்ட போதிலும் பிரதமரின் தலையீட்டினால் வெளியில் வந்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிரான விடயங்களில் சட்டம் செயற்;பட்ட விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டதா என்பது மர்மமாகவேவுள்ளது. சட்டம் அனைவருக்கும்; பொதுவானதாகவும் சமநிலையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் சட்டத்தை மதிப்பர்;' என அவர் மேலும் கூறினார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago