2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதுண்டு ஜேர்மன் பெண் காயம்

Editorial   / 2018 ஜனவரி 29 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த சரக்கு ரயிலில் மோதுண்டு, ஜேர்மன் நாட்டுப் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளாரென, பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சிகிச்சைகளுக்காக, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில், ஜேர்மனைச் சேர்ந்த கலேமன் நோரா (வயது 30) என்ற பெண்ணே படுகாயமடைந்துள்ளார். இவர் ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் மாணவி என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது நண்பர்களுடன், பதுளைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இவர், கித்துல்எல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போதே, ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .