2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வயோதிபப் பெண் திடீர் மரணம்

Gavitha   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம், நோர்வூட் தகனசாலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ பொதுசுகாதார காரியாலயத்துக்குட்பட்ட டிக்கோயா – போடைஸ் தொழிற்சாலைப் பிரிவில், கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் சடலமே, நேற்று முன்தினம் (22) மாலை, நோர்வூட்  தகனசாலையில், சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் தகனம் செய்யப்பட்டது என, பொகவந்தலாவ பொதுசுகாதார அதிகாரிகள்
தெரிவித்தனர்.

டிக்கோயா – போடைஸ்  தொழிற்சாலைப் பிரிவைச் சேர்ந்த 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கடந்த 16ஆம் திகதி திடீரென உயிரிழந்தார் என்றும் உயிரிழந்த சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செயயப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X