Editorial / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண குமார
மாத்தளை மாவட்டத்தில் நீடித்துவரும் வரட்சி காரணமாக, சிறு ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவிக்கும் விவசாயிகள், தாம் பாரிய பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மிளகு, கராம்பு, சாதிக்காய் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகள், வரட்சியால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன எனவும், விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாத்தளை, ரத்தொட்டை, வத்தேகம, உக்குவல, யடவத்த, நாவுல ஆகிய பிரதேசங்களில் மிளகுச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்ட விவசாயிகள், வரட்சியின் காரணமாக இச்செய்கை முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதென்றும் தெரிவித்தனர்.
வரட்சி நிலை தொடருமெனில், விவசாயிகள் பாரிய பாதிப்பை எதிர்கொள்வரென்று எச்சரிக்கை விடுத்துள்ள அம்பன விவசாய சம்மேளனம், இதுகுறித்து, அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளது.
4 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
18 Apr 2026