Editorial / 2018 ஜனவரி 12 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ள-குருநாகல் வீதி, கலேவேல திவுல்கஸ்கொடுவ பிரதேசத்தில், இன்று காலை இடம்பெற்ற வான் விபத்தில் படுகாயமடைந்த 9 பேர், கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வானொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வானானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டுவிலகிச் சென்று மதிலொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பெண்களும் இரு சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
27 minute ago
34 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
34 minute ago
53 minute ago