Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா
தலவாக்கலை பொலிஸ் பிரவுக்குட்பட்ட வட்டகொடை நகரத்தில் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை நோக்கிவந்த இ.போ.ச பஸ்ஸும் தலவாக்கலையில் இருந்து வட்டகொடை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதி காயமுற்ற நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ் வண்டியின் சாரதியின் கவனயீனமே விபத்துக்கான காரணம் என, தலைவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026