2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

விரலை வெட்டி மோதிரம் கொள்ளை

Gavitha   / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

83 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரின், கைவிரலை வெட்டி, தங்க மோதிரம் ஒன்றைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாலங்கொடை, எல்லெபொல பகுதியில், வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர்கள், குறித்த வயோதிபப் பெண்ணின் மோதிரம் கையில் இருந்து கழன்று வராதமையால், அது கழன்று வரும் வரை விரலை வெட்டியுள்ளனர். மோதிரம் கழன்று வந்த பின்னர், அதைக் கழற்றிக்கொண்டு, தப்பிச் சென்றுள்ளனனர்.

எனினும் தப்பிச் செல்லும்போது, கொள்ளையர்களால் கொண்டு வரப்பட்ட கத்தி, கயிறு ஆகியவற்றை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில்,  படுகாயமடைந்த வயோதிபப் பெண், பலாங்கொடை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .