Freelancer / 2025 ஜூலை 26 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து இன்று 4 வயதுடைய பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார் நிலையில் வைத்து விட்டு குழந்தையின் தாய் தயாராகி கொண்டிருந்த வேளை, குறித்த குழந்தை வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் குறித்த குழந்தையை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தை சடலமாக மீட்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீடகப்பட்ட குழந்தை கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தை சேர்ந்த நான்கு வயதுடைய கிரேக்சிக்கா நெகோமி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். R
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026