ஆ.ரமேஸ் / 2020 மே 24 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட லொக்ஹில் தோட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுககு புதிய வீடுகள் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான வீடுகளைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்த பின்னர், விரைவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என, அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்த 50 குடும்பங்களின் வீடுகளும் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் முற்றாக மூழ்கிய நிலையில், இது தொடர்பாக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, அமைச்சர் தொண்டமான், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்தே, பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதற்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மனிதவள நிதியத்தின் அதிகாரிகள், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், தோட்ட நிர்வாக அதிகாரிகள் என பலரும் லொக்ஹில் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர்.
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago