Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதைப் போன்றே, அரசின் கீழ் இயங்கும் சகல பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரச பாலர் பாடசாலைகளுக்கு ஒரு திகதியிலும், ஏனைய அரச பாடசாலைகளுக்கு வேறொரு திகதிகளிலும் விடுமுறை வழங்கப்படுகின்றன. அதேபோல், இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள், வெவ்வேறு திகதிகளிலேயே ஆரம்பிக்கப்படுகின்றன.
இதனால், பாலர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், மனதளவில் பாதிக்கப்படுவதாக, பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அரச பாடசாலைகளில் தொழில் புரியும் ஆசிரியர்களின் பிள்ளைகளும், பாலர் பாடசாலைகளுக்குச் செல்கின்றார்கள். அதேபோன்று, பாலர் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளும், மற்றைய பாடசாலைக்கு, கல்வி நடவடிக்கைகளுக்காகச் செல்கின்றனர்.
இரண்டு விதமாக விடுமுறை வழங்கப்படுவதால், இவ்விரு பாடசாலைகளிலும் கடமையாற்றும் ஆசிரியர்கள், விடுமுறை தினங்களில், தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப சகிதம், உறவினர்கள வீட்டுக்கோ, முக்கிய பயணங்களுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து, தமது குடும்பத்தோடு ஏனைய மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
பாலர் பாடசாலை மற்றும் ஏனைய அரச பாடசாலைகள் அனைத்துக்கும் வெவ்வேறாக இன்றி, ஒரே திகதியில் விடுமுறை வழங்கி, ஒரே திகதியில், இரண்டு வகைப் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து, அரசாங்கமும் கல்வி அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
56 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
6 hours ago