Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருக்குமேயானால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியால் மீரியபெத்த மக்களுக்கான வீடமைப்பு திட்டம் நிறைவேறியிருக்குமென தெரிவித்த ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆ.கணேசமூர்த்தி, பொதுத்தேர்தலில் வாக்குகளை சூறையாடுவதற்கே மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கல் நடப்பட்டது என்றும் கூறினார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், அமைச்சரவை அந்தஸ்த்திலுள்ள அமைச்சரினால் மீரியபெத்த மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் அவர் கூறினார். ஊவா மாகாண சபை மண்டபத்தில் புதன்கிழமை(4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரொருவர் மீரியபெத்தவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு, தாம் அமைச்சரவையின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தமது அமைச்சிடம் இவ் வீடமைப்புத் திட்டம் ஒப்படைக்கப்படின் மூன்று மாதங்களில் வீடமைப்புத் திட்டத்தை நிறைவு செய்து மக்களுக்கு வீடுகளை கையளித்து விடுவேனென்றும் கூறி வருகின்றார்.
இவ்வாறு கூறும் அவ்வமைச்சர், கடந்த எட்டு மாதங்களுக்கு முன் அமைச்சரவையின் அங்கிகாரமில்லாமலா, மீரியபெத்த மக்களுக்கான வீடமைப்புத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். மலையக அமைச்சர் பட்டாளமே பெரும் ஆடம்பரத்தின் மத்தியில், அவ்வீடமைப்புக்கான அடிக்கற்களை நாட்டி வைத்தது. இவ் அடிக்கற்கள் வைக்கப்பட்டு எட்டு மாதங்களாகியும் மலையக அமைச்சர் பட்டாளம் என்ன செய்து கொண்டிருக்கின்றது?.
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில், இவ் அடிக்கற்கள் நாட்டப்பட்டதானது, அடுத்து வந்த பொதுத் தேர்தலில் எமது மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தினாலாகும்.
அவ் வீடமைப்புத்திட்டத்தில் நான்கு வீடுகளின் நிர்மாணப் பணிகள்; மட்டுமே நிறைவு பெற்றிருக்கின்றன. இவ் வீடுகளும், பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் தங்குவதற்கும், வீடமைப்பு உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்குமே பாவிக்கப்பட்டு வருகின்றன.
ஊவா மாகாண வீடமைப்பு அமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம் பெற்றதும், மலையக அமைச்சர்கள் தத்தமது மௌனத்தை கலைத்து ஊடகங்கள் பலவற்றிலும் ஒன்றுக்குப் பின் முரண்பட்ட வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இக்கருத்துக்களை மீரியபெத்த மக்கள் செவிமடுப்பதற்கு தயாராக இல்லை.
எது எப்படியிருப்பினும் ஊவா மாகாண வீடமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமானின் முயற்சியினால், வெகு விரைவில் மீரியபெத்தவில்; பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் நிறைவுபெற்று, மக்களுக்கு கையளிக்கப்படும். இது விடயத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago