Kogilavani / 2016 ஜூன் 29 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண் குமார
மாத்தளை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்தனவின் வேண்டுகோளுக்கு அமையவே, இந்த வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மாத்தளை, லக்கல பிரதேசத்தில், தற்போது 112 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 100 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனூடாக லக்கல, தேவகிரிய பிரதேசத்தில் 28 வீடுகளும் மஹாஓயா பகுதியில் 28 வீடுகளும், நாவுல மிரிஸ்கந்த, பகுதியில் 14 வீடுகளும், ஹபுகயாய பகுதியில் 25 வீடுகளும் நிர்மாணிக்கப்பட உள்ளன என்று அவ்வதிகாரிகள் மேலும் கூறினர்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026