Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா
டெங்கு நுளம்பு பரவும் வகையில் வீட்டு சூழலை வைத்திருந்த 18 பேருக்கு , 36 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டதுடன், மேலும் நான்கு பேர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காமையினால், அவர்களுக்கெதிராக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில், நீதிபதி சம்பிக்க ராஜபக்ஷ முன்னிலையில், நேற்று மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பதுளை புறநகர்ப்பகுதியில், பதுளை சுகாதார சேவையின் மேற்கொண்ட பரிசோதனையின் போது, வீட்டு சுற்றாடலை டெங்கு நுளம்பு பரவும் வகையில் வைத்திருந்த 22 பேருக்கெதிராக, வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் 18 பேர் மட்டுமே, நிதிமன்றத்தில் ஆஜராகி, தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதுடன், தமக்கு மன்னிப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, நீதிபதி அவர்களை கடுமையாக எச்சரித்து, தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதமாக விதித்தார். இதேவேளை, நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத ஏனைய நால்வருக்கெதிராக அழைப்பாணை பிறப்பித்தார்.
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago