Kogilavani / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
ஹட்டன்- டிக்கோயா, பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களில் 14 பேர், நீக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஜனக நதுன் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
ஹட்டன்- டிக்கோயா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மறுமலர்ச்சிக்காக, புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டன.
பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலுக்கான சட்டத்தின்படி, வேட்பு மனுதாக்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக மேற்படி 14 பேரும் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வேட்புமனுக்கள் கடந்த 20 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வாதபிரதிவாதங்களைத் தொடர்ந்து, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தின்படி, ஹட்டன் பிரிவு 1 இல் 6 வேட்பாளர்கள், பிரிவு 2 இல் ஒருவர், பிரிவு 3 இல் ஒருவர், இலக்கம் 4 டிக்கோயாவில் 4 பேர், இலக்கம் 5 பங்களாவத்தையில் ஒருவர் என 14 பேர் வேட்பாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலக்கம் 4 டிக்கோயாவில் 9 பேரின் பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஹட்டன் பிரிவு 1,2,3,5 மற்றும் பங்களாவத்தை பிரிவுக்கான வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026