Sudharshini / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ,ஆர்.ரமேஸ்,மு.இராமச்சந்திரன்
தலவாக்கலையிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று, ஹட்டன் - தலவாக்கலை பிரதான வீதியின்; தேயிலைத் தொழிற்சாலையொன்றுக்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்து இன்று (05) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் குறித்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியிலிருந்து பழங்களை ஏற்றி வந்து தலவாக்கலையில் விற்பனை செய்துவிட்டு, மீண்டும் இரத்தினபுரி நோக்கிச் செல்லும் போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
லொறியின் சாரதிக்கு எற்பட்ட நித்திரை சோர்வே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலுதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026