2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; 44 பேர் காயம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜித்தா, ஆர்.ரமேஸ்

லிந்துல- நுவரெலியா வீதியில் 7ஆம் கொலனிக்கு அண்மையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 44 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை 9.25க்கு இடம்பெற்றுள்ளது.
தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸே சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாகவும், பஸ் விபத்துக்குள்ளான போது, அதில் 45 பேர் பயணித்ததாகவும் அறியமுடிகின்றது.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற சிரமாதான பணிகளில் பங்கேற்றுவிட்டு தேயிலை ஆராய்ச்சி நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .