Niroshini / 2017 மே 13 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
கினிகத்தேனை பொலிஸ் பிரிலவுக்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை - ரம்பதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வான், கார் மற்றும் கடை ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்று கினிகத்தேனை ரம்பதெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த கடை ஒன்றுக்குள் உட்புகுந்து, சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வான் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் பாதிப்பில்லை எனவும் விபத்து ஏற்படும் போது காரிலும், வியாபார கடையிலும்ம் எவரும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்த்னர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago