Kogilavani / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
கண்டி, குருனாகலை வீதியில் புதன்கிழமை(10) இரவு இடம்பெற்ற விபத்தில், விமானப் படை வீரரான ஏ.ஏ.பீ. கிவுல்தெனிய என்பவர் (வயது 25) உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி நுகவெலவைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரழந்தள்ளார். இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஒன்றில் மோதியதில் விமான படை வீரர் லொறி ஒன்றின் பின்னால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் சுமார் 30 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், விமானப் படைவீரர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார். அவரது நண்பர் தொடர்நது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியையும் லொறியின் சாரதியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago