Kogilavani / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

பல வருடங்களாக உயிர் அச்சுறுத்தலோடு வாழும் நுவரெலியா-வேவண்டன் தோட்ட மக்களுக்கு, தனித்தனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று, அமைச்சர் பி.திகாம்பரம் உறுதியளித்துள்ளார்.
நுவரெலியா கொத்மலை பிரதேசத்துக்கு உட்பட்ட வேவண்டன் தோட்ட மக்கள், குடியிருப்புக்கு மேலாக கல் விழும் அபாயத்தில் பல வருடங்களாக அசௌகரியங்களுக்கு மத்தியில் ஏறத்தாழ 58 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
அம்மக்கள், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தை, கொழும்பில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில், நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வாக, வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்குமாறும் அம்மக்கள் கேட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் திகாம்பரம், அம்மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை முன்னெடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வேவெண்டன் தோட்டம், ஆரம்ப காலம் முதல் தனியார் துறையினருக்கு சொந்தமானதாக காணப்பட்டபோதிலும் ஒரு பகுதி அரசாங்கத்தால், மீளப் பெறப்பட்டு அகலவத்தை தனியார் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வேவண்டன் தோட்டத்தின் ஒருபகுதி, அகலவத்தை தனியார் கம்பனிக்குரியதாகவும், மிகுதி தனியாருக்கு உரியதாகவும் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago