Editorial / 2017 ஜூன் 29 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. இராமச்சந்திரன், ஆ.ரமேஸ்
ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா, இன்று (29) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.
பிரதான வைபவம், ஹட்டன் டி.கே.டப்ளியு மண்டபத்தில், இன்றுக்காலை 10 மணிக்கு நடைபெறும் என்று பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஹட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
அதுமட்டுமன்றி, கொட்டகலையில் உள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம்( சி.எல்.எப்) நிலையத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அங்கு அவரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் வரவேற்கவுள்ளனர். அதன்பின்னர், ஜனாதிபதிக்கும் இ.தொ.காவுக்கும் இடையில் சினேகபூர்வ பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago