2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனுக்கு வருகிறார் ஜனாதிபதி

Kogilavani   / 2017 ஜூன் 12 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

ஹட்டன் ஹைலன்ஸ கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதாக, கல்லூரியின் அதிபர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்

ஹைலன்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே, அதிபர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா, எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, 125ஆவது ஆண்டு நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன் பாடசாலைக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெறவுள்ளது.

மேலும் “த ஐலண்டர்” எனும் மலர் வெளியீடும் சகல துறைகளிலும் சாதனைகளை படைத்த கல்லூரியின் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .