Kogilavani / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமனி பண்டார
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (28), ஹட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ஹட்டனில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே, பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, ஹட்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், முதற்; கட்டமாக விசேட கூட்டமொன்று ஹட்டன் டன்பார் வீதியிலுள்ள விஜித திரையங்கில் 8.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து பேரணி இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிகழ்வில் ஐ.தே.க.வின் அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .