2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

150 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டிவிபத்து; பெண் பலி

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பாலித ஆரியவங்ச

பதுளை, மஹியங்கனை தல்தென 6ஆவது மைல்கல் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26)  முற்பகல் 11.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், பலகோல்லப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய டபிள்யூ.எம். ஹீன்மெனிக்கே என்ற வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், 62 வயதுடைய பெண் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகிய இருவர் காயமடைந்த நிலையில் பதுளை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி, தூக்க கலகத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .