2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

‘அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை’

Yuganthini   / 2017 மே 10 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-உமாமகேஸ்வரி

“தமிழ் மொழி தினப்போட்டியில்  பங்குபற்றாத பாடசாலை அதிபர்கள் மற்றும் பொறுப்பான ஆசிரியர்களுக்கெதிராக ஓழுங்காற்றல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, இரத்தினபுரி வலயக் கல்விப்பணிப்பாளர் ஈ.எஸ்.ஜீ.ராஜதாஸ தெரிவித்தார்.

பெல்மதுளை கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.டப்ளியூ. பண்டார தலைமையில், பெல்மதுளை தர்மாலோக்க மகா வித்தியாலயத்தில் நேற்று(9) நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர், தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இவ்வருடத்துக்கான, வலய மட்டத்திலான தமிழ் தினப்போட்டிகள், இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் காவத்தை ஸ்ரீ கிருஸ்ணா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அண்மையில், நடைப்பெற்றன அதில், பெரும்பாலான தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்கள்  பங்குப்பற்றவில்லை. இதற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. இப்போட்டியில் மாணவர்களை பங்குபற்றவைக்காத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக  ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிங்கள மொழி மூலப்பாடசாலை மாணவர்கள் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்கின்றனர். இவர்களும் தமிழ் மொழித்தினப் போட்டியில் கட்டாயம் பங்குகொள்ள வேண்டும். ஆனால், இது குறித்து இப்பாடசாலைகள் கவனத்தில் கொள்வதில்லை. கல்வி அமைச்சினால் அனுப்படும் சுற்று நிரூபங்களை நாம் உதாசீனம் செய்யக்கூடாது.

அதிபர், ஆசிரியர்கள்தான் கல்விச்சேவைக்கு அளப்பறிய சேவைகளை செய்து வருகின்றனர். இவர்கள் இல்லாவிட்டால் அல்லது முனைப்புடன் செயற்படாவிட்டால் நாம் கல்வியில் உயர் பெறுபேறுகளை காணமுடியாது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .