2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'அமெரிக்கன் கோணர்' திறந்து வைப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 26 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, டி.எஸ். சேனநாயக்கா வாசிகசாலை வளாகத்தில் 370 இலட்சம் ரூபாய் செலவில் „அமெரிக்கன் கோணர் என்ற பிரிவு நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட தூதுவராக, அவரது ஊடகப் பிரதிப்பணிப்பாளர் மெக்கோன் பிலிப்ஸ் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்தார்;. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், 'இளைய தலைமுறையினருக்கு பல்வேறு வகையிலும் பயன்தரக் கூடிய வகையிலும் நாடுகளுக்கிடையே கலாசாரப் பரிமாற்றத்துக்கான தளமாகவும் இப்பிரிவு அமையும் என்றார்.

சர்வதேசத் தொடர்புகள், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைசார் தகவல்களையும் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். இது ஒரு வாசிகசாலையாக மட்டுமல்லாது, பல்வேறு உயர்;தர நிகழ்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ளும் இடமாகவும் இது அமையும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .