Kogilavani / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சௌமிய இளைஞர்; நிதியம், இன்று(19) தனது 21வது பிறந்த நாளை கொண்டாடுகின்றது. இதனையொட்டி கேகாலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மலையக பெருந்தோட்ட மக்களது சுபீட்சம், நாட்டின் அமைதி, நிரந்தர சமாதானம், சமய-சமூக நல்லிணக்கத்துக்கான இறை ஆசி வேண்டி தெஹியோவிட்ட புனித அந்தோனியார் தேவாலயத்திலும் நவகமுவ பத்தினி தேவாலயத்திலும் பூஜை வழிபாடுகளும் மௌனவிரதமும் நடத்தப்படவுள்ளன.
சமய வழிபாடுகளை இரத்தினபுரி மறைமாவட்ட குரு முதல்வாரன தெஹியோவிட்ட புனித அந்தோனியார் தேவாலய பங்கு தந்தை அதி வண.டேமியன் பெர்னாண்டோ அடிகளாரும் நவகமுவ பத்தினி தேவாலயத்தின் பிரதம குரு பேரலந்த பண்டார ஆகியோரும் நடத்தவுள்ளதுடன் மௌனவிரதம் நிதியத்தின் தலைவர்; எஸ்.பி.அந்தோனிமுத்து தலைமையிலும் நடைபெற உள்ளது.
சௌமிய இளைஞர் நிதியம்,எஸ்.பி.அந்தோனிமுத்துவின் எண்ணக்கருவுக்கு அமைவாக அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானினால் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிதியத்தின் 21ஆவது ஆண்டை குறிக்கும் முகமாக மே மாதம் 19ஆம் திகதி வரையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago