Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா, செனரத் பண்டார
பதுளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில், நேற்று சனிக்கிழமை (3) இரவு இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில், 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ்ஸூம், பதுளை பசறை வீதி, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பஸ்ஸின் சாரதி உட்பட 14 பேர் காயங்களுக்குள்ளான நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பத்துப் பெண்களும் நான்கு ஆண்களும் உள்ளடங்குவதாகப் பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கண்டி கெட்டம்பே இரண்டாம் இராஜசிங்க மாவத்தை பகுதியில் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று, சனிக்கிழமை (3) இரவு வீதியைவிட்டு விலகி மஹாவலி கங்கையில் விழுந்து விபத்துக்குள்ளானதில்;, ஹிந்தகல பாஹின்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பந்துல ஜனக குணசேகர (வயது 24) என்பவர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனமானது கங்கையின் அடிமட்டத்துக்குச் சென்றதால் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாதிகளின் உதவியுடனே மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வித்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .