Kogilavani / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
'நுவரெலியா கல்வி வலயத்தின் வளர்ச்சிக்கும் பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியதன் ஊடாக, மாணவர்களின் கல்வி அடைவு மேம்பாட்டுக்காக என்னோடு இணைந்து பங்காற்றி வரும்; உதவிக் கல்விப் பணிப்பாளர்களதும் ஆசிரிய ஆலோசகர்களது பங்களிப்பு அளப்பரிது' என நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாச தெரிவித்தார்.
இனிவரும் காலங்களிலும் நுவரெலியாக் கல்வி வலயத்தின் செயற்பாடுகள் சிறந்த முறையில் அமைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் கோரினார்.
நுவரெலியா கல்வி வலயத்திலிருந்து, இவ்வாண்டு ஓய்வுபெற்று செல்லவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.டி.லோரன்ஸ் கோட்டக கல்விப் பணிப்பாளர் எம்.சோமசுந்தரம், ஆசிரிய ஆலோசகர்களான அருண்மொழிச்செல்வன், திருமதி.வசந்தி, திருமதி.பத்மநாதன் மற்றும் பதவி உயர்வுப் பெற்று ஸ்ரீபாத தேசியக் கல்வியியற் கல்லூரிக்கு தெரிவான ஆசிரிய ஆலோசகர் கிருஸ்ணகுமார் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் சேவை நலன் பாராட்டும் நுவரெலியா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் எம்.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நுவரெலியாக் கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஒன்றியமானது, இன்று கல்விப் புலத்துக்கு சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தமையானது மகிழ்வுக்குரிய விடயமாகும்.
இங்கிருந்து ஓய்வுபெற்று செல்லவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் எனக்கு முழுமையான ஒத்துமைப்பை வழங்கி செயற்பட்டவர்கள்' எனவும் அவர் மேலும் கூறினார்.


5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026