2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சுகாதார பிரச்சினையில் பண்டாரவளை; தீர்வு வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Kogilavani   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா   

பண்டாரவளை மாநகரசபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக பண்டாரவளை நகரம் குப்பைகளால் நிரம்பியுள்ளது. இதனால், அப்பிரதேச மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

பண்டாரவளை மாநகரசபையில் கடமையாற்றிவரும் ஐவருக்கு  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள்  திங்கட்கிழமை (21) முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் இப்பிரச்சினைக்கு மாநகரசபையினர் தீர்வை முன்வைக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாநகர சபையின் அதிகாரிகள் இருவரும் சாதாரண ஊழியர்கள் மூவரும்  திடீர் இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அரசியல் பழிவாங்கல் காரணமாகவே,  ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தசநாயக்க, இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளார் எனக் கூறி பண்டாரவளை மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .