Kogilavani / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
'பெருந்தோட்டத் தொழிலிலிருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்கள், தமக்கான சேவைக்கால பணத்தை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அக்கரப்பத்தனை பிரதேசத்திலுள்ள தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள், சேவைக்கால கொடுப்பணவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர்' என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அக்கரப்பத்தனை காரியாலய பிரதிநிதி ஏ.கனகராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
'சேவைக்கால பணத்தை பெற்றுக்கொள்ளாத 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் எமது காரியாலத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். இதேப்போன்று, ஏனையத் தொழிற்சங்கத்தில் உள்ளவர்களும் அவர்களது தொழிற்சங்கங்களில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது' என அவர் குறிப்பிட்டார்.
விசாரணைகளின்போது, இதற்கான வைப்பை கம்பனிகள் தரவில்லை என கூறி தோட்ட அதிகரிகள் சமாளித்து விடுவதாக அவர் மேலும் கூறினார்.
'ஒரு தொழிலாளி இப்பணத்தை பெறுவதற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார். குறிப்பாக இக்கொடுப்பணவுக்கான விண்ணப்பத்தை பெற, ஹட்டனுக்குச் செல்ல வேண்டியுள்ளது. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தப் பின்னர், மீண்டும் ஹட்டனிலுள்ள காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்படிவத்தில் பிழைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை சரிப்படுத்த, தோட்டக் காரியாலயம், கிராமசேவகர் காரியாலயம், தொழில் காரியாலயம் என அழைந்து திரியவேண்டியுள்ளது.
இவ்வாறு ஒரு தொழிலாளி சேவைக்கால பணத்தை பெறுவதற்காக கஷ்டப்படுகின்றப் போதிலும் கொடுப்பணவை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ளமை கவலைக்குரிய விடயமே' என்றார்.
'தொழிலாளர்களின் இத்தகைய பிரச்சினைகளை அறிந்துக்கொள்ளும் இடைத்தரகர்கள், இவ்வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதுடன் அப்பாவி தொழிலாளர்களை ஏமாற்றி இலாபமடைகின்றனர்.
சேவைக்கால கொடுப்பணவை உரிய நேரத்தில் வழங்கமுடியாததால், சில தோட்ட நிர்வாகங்கள், குறித்த தொழிலாளர்களுக்கு மீண்டும் தற்காலிகமாக தொழிலை வழங்கியுள்ளன. தற்காலிகமாக இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கு, தோட்டத்தில் வழங்க வேண்டிய சலுகைகள் எதுவம் வழங்கப்படுவதில்லை' என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026