Kogilavani / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாநூ கார்த்திகேசு
'மலையகப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். மலையக தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்காக ஸ்தாபிக்கப்பட்டதே பெருந்தோட்ட அபிவிருத்தி மனித மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனமாகும்.
இந்நிறுவனத்துடன் நோர்வே அரசாங்கமும் பங்குதாரர்களாக இருந்து மலையக மக்களின் முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்' என இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான நோர்வேத் தூதுவர் எச்.ஈ.தோர்பியோன் கௌஸ்டாடீசீதர் தெரிவித்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் 23ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'நோர்வே அரசாங்கமானது, 1998 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையில் பெருந்தோட்ட அபிவிருத்தி மனித மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகின்றது.
இக்காலக்கட்டத்தில் மலையகத்தில் 5,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதுடன், 10,000 வீடுகள் புனரமைக்கப்பட்டன. 50,000 மலசலகூடங்களும் கட்டிக் கொடுக்கப்பட்டன' என்றார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சருமான வீ.புத்திரசிகாமணி, 'நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளின் உதவியுடன் பெருந்தோட்ட அபிவிருத்தி மனித மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனம் மலையக சமுதாயத்தின் மேம்பாட்டின் பொருட்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்நிதியங்களின் உதவியின் ஊடாக 3,000இற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 1,200 வீடுகளும் இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் 1,000 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 5 வருடத் திட்டத்தின் கீழ் நாட்டை அபிவிருத்திச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், வீழ்ச்சியடைந்துள்ள தேயிலை உற்பத்தி மற்றும் இறப்பர் உற்பத்தியையும் அபிவிருத்தி செய்வோம்' என அவர் தெரிவித்தார்.
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago