Kogilavani / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் நல்லாட்சிக்கு, பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொலிஸார் தமது கடமைகளை திறம்பட செய்ய வேண்டும் என நுவரெலியா பிராந்திய பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள
ஜி.எச்.விமலதாச கூறியுள்ளார்.
'மலையக மக்களும் ஏனைய சமூகங்களைப் போல சமமாக மதிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதுப் போன்று, அனைத்து விடயங்களிலும் மலையக மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். இன்று அந்த நிலை நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.
நுவரெலியாவுக்கு பிராந்திய பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜி.எச்.விமலதாச, தனது கடமைகளை பொறுப்பேற்றப்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
'பொலிஸ் சேவைக்கு வந்த பின்பு, நான் பார்க்க வளர்ந்தவர்களே இன்று மலையகத்தில் அரசியல் தலைமைகளாக உள்ளனர். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானைத் தவிர, இவர்கள் அனைவருடனும் மிகவும் நெருங்கிப்பழகியிருக்கின்றேன். எனது சேவையை சிறப்பாக செய்வதற்கு அதுவும் ஒரு காரணம்' என்றார 'இன்று இந்த நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து முன்னெடுக்கின்ற நல்லாட்சியையும் அதன் எதிர்பார்ப்பையும் முன்கொண்டுச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு, பொலிஸாருக்கும் உள்ளது. நான் கடந்த 25 வருடங்களாக மலையகப் பகுதிகளில் இந்த மக்களுடன் இணைந்து சேவை செய்து வருகின்றேன். மலையக பெருந்தோட்ட மக்கள் மிகச் சிறந்த உழைப்பாளிகள்.
அதேபோன்று தைரியசாலிகள். நான் அவர்களுடைய பல பிரச்சினைகளை நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்லாமல் சுமூகமாக பேசி தீர்த்துள்ளேன். இன்று அந்தச் சமூகம் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. அதற்கு நல்லாட்சி அரசாங்கமும் ஒரு காரணம்' என்றார்.

6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026