Kogilavani / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வார நீண்ட விடுமுறையின் போது, ஆறு இலட்சத்துக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்தாக, நுவரெலியா மாநகரசபை மேயர் மஹிந்த தொடம்பே கமகே தெரிவித்தார்.
வழமையாக வசந்த காலத்தில் மாத்திரமே நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். இருப்பினும், அக்காலப்பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகளை விட கடந்த வாரம் இடம்பெற்ற நீண்ட விடுமுறையின் போது அதிகளவானோர் நுவரெலியாவுக்கு வருகை தந்தனர். இவர்களின் நலன் கருதி, சகல வசதி வாய்ப்புகளையும் நுவரெலியா மாநகரசபை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாகவும்' அவர் கூறினார்.
நுவரெலியா நகருக்குட்பட ஹோட்டல்களில் போதுமான விடுதி வசதிகள் காணப்படாமையினால் சிலர் நகரை அண்டிய சிறிய நகரங்களில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
47 minute ago
54 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
54 minute ago
7 hours ago