Kogilavani / 2016 ஜூலை 29 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள நீர்நிலைகள் அசுத்தமடைந்து வருவதாகவும் இதனால், செங்கமாலை, காச நோய், டெங்கினால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பசறை அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் கடந்த ஆறு மாதங்களில் 8 பேர் செங்கமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக பசறை சுகாதார வைத்திய அதிகாரி கே.எம்.சமரபந்து தெரிவித்துள்ளார். இதேவேளை, காச நோயினால் 15 பேரும் டெங்கினால் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
பசறைப் பகுதியின் கோணகலை தோட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளும் மாசடைந்து காணப்படுவதால் 98 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டங்களில் மலசலகூட வசதியின்மை, மனிதக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதே இதற்கு பிரதான காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026