Kogilavani / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இரத்தினபுரியில் கிடைக்கப்பெற்ற உலகிலேயே பெறுமதிமிக்கதாக கூறப்படும் இரத்தினக்கல்லையும் அதன் உரிமையாளரையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
இரத்தினபுரியிலுள்ள இரத்தினக்கற்கள் அகழும் இடத்திலிருந்து பெறுமதிவாய்ந்த நீல நிற இரத்தினக்கல் கண்டெடுக்கப்பட்டது. 1404.49 கெரட்
( 281 கிராம்) பருமனையுடைய இக்கல்லானது 4,200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட இரத்தினக்கற்களை விட இக்கல்லானது பெறுமதிவாய்ந்தது என அதிகார சபை மேலும் கூறியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இதன் உரிமையாளரது விவரத்தை அதிகார சபை வெளியிடவில்லை என்றாலும் இவர், தொழில்நுட்;பத்துறையில் ஈடுபாடு உள்ள வர்த்தகர் எனத் தெரியவருகிறது.
இதேவேளை, இந்த இரத்தினக்கல் போலியானது என்ற தகவலொன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026