Kogilavani / 2016 மே 02 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.கோகுலன்
வெலிமடை திவுரும்பொல ரஜமகா விகாரையிலுள்ள பழமைவாய்ந்த அரச மரத்தை வெட்டி, பலகைகளாக்கிய அவ்விகாரையின் விகாராதிபதி உட்பட மூவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிமடை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று(2) உத்தரவிட்டார்.
இராவணனால் இலங்காபுரிக்கு கடத்தி வரப்பட்ட சீதை, அயோத்திக்கு மீண்டும் செல்வதற்கு முன்பாக தீகுளித்த இடமாக நம்பப்படுகின்ற இடமே திவுரும்பொல விகாரையாகும். இவ்வாறு வரலாற்று சிறப்புமிகு விகாரையிலுள்ள போதி மரத்தை வெட்டிய குற்றத்துக்காகவே இவ் விகாராதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். பழைமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான போதி மரத்தை (அரச மரம்) வெட்டிய பிக்குவை கைதுசெய்யுமாறு கோரி, பொதுமக்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த பிக்கு உட்பட மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைதானவர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டது அவர்களை 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏலவே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மேற்படி மூவரையும் மீண்டும் நேற்று(2) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago