Kogilavani / 2016 மே 04 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
முன்பள்ளி ஆசிரியைகளின் பயிற்சி நெறிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி, மே 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியைகளுக்கு தரமான பயிற்சி வழங்குவதன் மூலம் பிள்ளைகளுக்கு தரமான முன்பள்ளி கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தோடு திறந்த பல்கலைக்கழக தரத்திலான முன்பள்ளி ஆசிரியர்; பயிற்சி நெறியை பிரிடோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக இப்பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிநெறியை நிறைவுசெய்த சுமார் 170 ஆசிரியர்கள், தற்போது சிறந்த முன்பள்ளி கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இப்பயிற்சி நெறியின்போது விரிவுரையாளர்கள் முன்பள்ளிகளுக்கு நேரடியாக விஜயம்செய்து செயற்றிறன் பயிற்சிகளை வழங்கி முன்பள்ளிகளை கண்காணிப்பு செய்வதால், முன்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படுகிறது' என்றார். 'எனவே, இந்த பயிற்சி நெறியை தொடர விரும்புவர்கள், தங்களை பதிவுசெய்து தங்கள் திறமைகளை அதிகரித்துக்கொள்வதுடன், முன்பள்ளிகளின் தரத்தை உயர்த்திக்கொள்ள முன்வர வேண்டும். பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் பிரிடோ நிறுவனம் அல்லது 077-2277428, 077-2277425 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும்' என அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago